உலகம் உறைய நேரிட்டால்

>> செவ்வாய், 18 நவம்பர், 2008

உலகம் உறைய நேரிட்டால்


THE DAY AFTER TOMORROW என்றொரு ஆங்கிலத் திரைப்படம். சூறாவளியும் வெள்ளபெருக்கும் நகரங்களை அழித்தொழித்து, மக்களின் உயிரை உறையவைப்பதாக இந்தப் படம் காட்டுகின்றது. "இதற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. உலகளாவிய காலநிலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது. என்னேனும் ஒரு நாள் கடுமையான பாதிப்பை அது ஏற்படுத்தியே தீரும்" என்று சீன அறிவியலாளர் DONG WENTIE கூறுகிறார்.

உலகளாவிய வெப்பமானது, பூமியை எப்படி உறையச் செய்யும் என்று, சாதாரன மக்கள் கேள்வி எழுப்பலாம். அல்லது புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கலாம். ஆனால், நிபுணர்கள் அதற்கான விளக்கத்தை தர முடியும். இந்த வெப்ப அதிகரிப்பானது, பனிப்பாறைகளை உருகச் செய்யும், கடலின் வெப்பநிலை குறையுமாறு செய்யும். அடுத்த 20 ஆண்டுகளில், உலகில், தீவிரவாதிகளால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும், இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று, அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

நிலப் பரப்பு, மூல வளம் ஆகியவை குறைந்து போவதன் காரணமாக ஏற்படும் இயற்கைச் சீற்றங்களினால், பிராந்திய முரண்பாடுகளினால், அல்லது அணு ஆயுதப் போரினால்-ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் கூடும் என்றும் அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது. உறைபனியிமான சைபீரியா போல பிரிட்டன் மாற வாய்ப்புண்டு, ஐரோப்பாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்க நேரிடலாம். இவையெல்லாம் உண்மையாக நடந்திடுமா என்று மக்கள் வியப்பில் ஆழ்ந்திடக்கூடும். உண்மையில்,

இத்தகைய மாற்றங்கள் நேரிட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்பது பொதுவான கருத்து. ஆக, THE DAY TFTER TOMWRROW திரைபாபடம் பயமுறுத்தும் போல், உடனடியாக ஏதும் நடந்திட வாய்ப்பில்லை. ஆனாலும், ஒரு நாள் இவ்வாறு நடைபெற நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதில் அறிவியலாளர் உடன்படுகின்றனர். "நாளை மறுநாள் இந்த உலகம் உறைந்து போகாமல் தடுப்பதற்கு-எதையெல்லாம் செய்ய இயலுமோ அவற்றைக் கண்டிப்பாகச் செய்திடுவோமாக!"

Read more...

புற்றுநோய் புதிய தகவல்

>> வெள்ளி, 14 நவம்பர், 2008

புற்றுநோய் புதிய தகவல் - I

உடலில் உள்ள செல்கள் எனப்படும் உயிரணுக்கள் வளர்ந்து பிரிந்து, உடலை நலமாக வைத்துக்கொள்ள தேவையான அளவுக்கு பல உயிரணுக்களை உண்டுபண்ணுகிறன. இவ்வாறு உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் சிதைவினை கட்டுப்படுத்தும் வளர்சிதை மாற்றத்தின் போது உடலுக்கு தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதான உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில், சிலவேளை இறக்காமல் இருந்துவிடலாம். இவ்வாறு இறக்காமல் அதிகரிக்கும் உயிரணுக்கள், திசுக்களின் கூட்டாகிய கட்டிகளை ஏற்படுத்துகிறன.

எல்லா கட்டிகளும் புற்றுநோயல்ல. அவற்றில் தீங்கில்லா மற்றும் தீங்கான கட்டிகள் உள்ளன. கேடுவிளைவிக்கும் தீங்கான கட்டிகள் தான் புற்றுநோயாகும். இதிலுள்ள உயிரணுக்கள் இயல்புக்கு மாறாக, எந்த கட்டுப்பாடுமின்றி பிரிவுற்று பெருகும். அப்படி பலுகிபெருகும் புற்று உயிரணுக்கள், அவற்றை சுற்றியுள்ள நல்ல திசுக்களுக்குள் சென்று அவற்றையும் அழித்துவிடும் ஆற்றல் கொண்டவை. புற்று உயிரணுக்கள் இரத்த ஓட்ட மற்றும் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்து, உடலின் பிற உறுப்புகளில் புற்றுநோய் கட்டிகளை ஏற்படுத்தும். இன்றுவரை தொடக்கத்திலேயே கண்டறிந்து கொள்ள முடியாத மற்றும் தீர்க்க முடியாத நோயாக தான் புற்றுநோய் இருந்து வருகிறது.

இது இவ்வாறிருக்க, பிரிட்டனிலுள்ள பதின்ம வயதினர் பலர் தொண்டை, கருப்பை, விரை மற்றும் தோல் தொடர்ப்பான புற்றுநோய்களால் துன்புறுவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 1979 முதல் 2003 ஆம் ஆண்டுகளில் வளரிளம் பருவத்தினரிடம் காணப்பட்டதை விட, தற்போதைய அதிகரிப்பு விகிதம் உயர்ந்துவருகிறது. இலண்டனில் "பதின்ம வயதினரிடம் புற்றுநோய்" என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வழங்கப்பட்ட ஆய்வின் முடிவுகளில் இது வெளிப்படுத்தப்பட்டது.

கடந்த முப்பதாண்டு காலத்தில் தொண்டை மற்றும் கருப்பை தொடர்பான புற்றுநோய் பெறுவது, பிரிட்டனிலுள்ள பதின்ம மற்றும் வளரிளம் பருவத்தினரை தவிர்த்து, இதர எல்லா வயதினரிடையும் குறைந்துள்ளது. ஆனால் 15 முதல் 19 வரையான பதின்ம வயதினரிடம் எறக்குறைய 7 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று பிரிட்டன் புற்றுநோய் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தோல் புற்றுநோய் எல்லா வயதினரிடையேயும் அதிகரித்தது. ஆனால் 35 முதல் 39 வயதினரிடம் ஆண்டுக்கு 2.5 விகிதம் மட்டுமே அதிகரித்தது. ஆனால் 20 முதல் 24 வயதினரிடத்தில் 7 விழுக்காடு அதிகரித்தது.

குடல், விரை, மூளை தொடர்பான புற்றுநோய் வகைகள் தான் வளரிளம் பருவத்தினரிடம் அதிகமாக காணப்படுகின்றன. என்றாலும் இந்த அதிகரிப்பு எதனால் ஏற்படுகின்றது என்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வகத்தின் குழந்தை மற்றும் குடும்ப ஆய்வுக்குழுவின் இயக்குனர் ஜில்லியன் பிர்ட்ச் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். பருவ வயதை அடையும்போது தூண்டப்படும் உடலுறுப்புகளின் வளர்ச்சியால் கூட தொண்டை, கருப்பை மற்றும் விரை தொடர்புடைய புற்றுநோய்கள் ஏற்படலாம். எனவே இந்த வயதினர் புற்றுநோய் ஏற்பட, மரபணு தொடர்பாக குறைந்த எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளனரா? என்ற திசையில் அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று அவர் கூறினார்.













பொதுவாக, புற்றுநோய் யாருக்கு அதிகமாக வருகிறது? அவர்கள் செய்யும் வேலையென்ன? என்பதை ஆய்வு செய்ய ஜப்பான் சுகாதார அமைச்சகம் முனைந்தது. அமர்ந்து கொண்டே வேலைசெய்பவர்களை விட, ஓடியாடி வேலை செய்பவர்கள் தான் குறைவாக புற்றுநோய் பெறுபவர்களாக இருக்கிறனர் என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்களை விட ஓடியாடி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களில் முறையே 13, 16 விழுக்காட்டினர் புற்றுநோய் பெறும் சாத்தியக்கூறுகள் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.




அமெரிக்க நோய் விபரவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள்படி, ஆய்வாளர்கள் ஜப்பானின் 9 மாநிலங்களில் வாழ்கின்ற 45 முதல் 74 வயது வரையான எண்பதாயிரம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு செய்தனர். அமர்ந்தே இருப்பது, நடப்பது, நிற்பது, உறங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்கள் நாள் முழுவதும் செய்கின்ற ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கண்காணித்தனர். ஓய்வு அல்லது கட்டுக்கோப்பான உடல் பெற எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், ஒட்டுமொத்த உடற்பயிற்சி மற்றும் வேலைகளை உள்ளடக்கி ஜப்பானில் முதல்முறையாக இந்த ஆய்வை செய்துள்ளனர். இதன் மூலம் ஓடியாடி வேலை செய்யும் அல்லது ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடும் ஜப்பானிய பெண்களிடத்தில் புற்றுநோய் ஏற்படும் விழுக்காடு குறிப்பிடதக்க அளவு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது




புற்றுநோய் புதிய தகவல் - III



சாதாரணமாக புற்றுநோய் உருவாகிய பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதனை கண்டறியக்கூடிய நிலையுள்ளது. இந்நிலையில் புற்றுநோய்க்கு இட்டுச்செல்லக்கூடிய கட்டிகளை இனம்காண பிரிட்டன் அறிவியலாளர்கள் ஒரு புதியவழியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டன் உணவு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள், பெருங்குடல் புற்றுநோயாளிகளின் உயிரணுக்களை சாதாரண உயிரணுக்களோடு ஒப்பிட்டு பார்த்தனர். புற்றுநோயாளிகளிடம் காணப்பட்ட உயிரணுக்களில் அந்நோய்க்கு இட்டு செல்லக்கூடிய சில வேதியல் மாற்றங்களை கண்டனர்.

குடல் தொடர்பான புற்றுநோய்க்கு இட்டு செல்லுகின்ற திசுக்களில் 18 மாற்றங்களையும், புற்றுநோயாளிகளின் இதர பகுதிகளிலான சாதாரண திசுக்களின் மரபணுக்களை விட தெளிவான வேதியல் மாற்றங்களையும் மரபணுக்களில் கண்டதாகவும் இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ஐயன் ஜாண்சன் குறிப்பிட்டார். பெருங்குடல் புற்றுநோயாளிகளின் வயிற்று பகுதியிலான உயிரணுக்கள், உயிரணு மூலக்கூறுகளை வழக்கத்திற்கு மாறாக பெற்றிருந்ததை ஆய்வில் கண்டறிந்தனர். இவ்வாறு உயிரணுக்களில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை தெரிந்து கொள்வதன் மூலம் வருங்காலத்தில் புற்றுநோய்க்கு இட்டுசெல்லும் திசுக்களை இனம்கண்டு அந்நோய் வருவதை தடுக்கும் முறையை கண்டறிந்துள்ளனர்.




<வேதியல் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படும் பிற முறைகளை மறுக்காதபோதும், மோசமான உணவு வகைகள் மற்றும் வாழ்க்கை முறையே இந்த வேதியல் மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்து புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணுக்களை தூண்டுகின்றன என்று ஆய்வாளர்களின் கருத்து தெரிவித்துள்ளனர். நம்முடைய உணவு முறைகளை கட்டுப்படுத்தி சத்தான நல்ல உணவு வகைகளை நமது வழக்கப்படுத்தி கொண்டால் ஆக்கபூர்வ நன்மை விளையும் தானே.





நன்றி -சீனா வானொலி





Read more...

கால்சியம் மாத்திரை யாருக்கு?

கல்சியம் மாத்திரைகள் யாருக்கு? எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்?

“நீங்கள் கல்சியம் குளிசை ஒவ்வொரு நாளும் போட வேண்டும்” என மருத்துவர்கள் ஆலோசனை கூறினால், “நான் ஏற்கனவோ தினமும் போடுகிறேன்” என்றுஅல்லது, “மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா குடிக்கிறேன்” என்ற மறுமொழிதான் இப்பொழுது கிடைக்கிறது.ஆம்! இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தான்.தாமாகவோ அல்லது ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களாலும் தூண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள். ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்.




  • எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன் செயற்பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும் ஒஸ்டியோபொரோசிஸ் (osteoporosis)நோய்க்கு கல்சியம் பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.எலும்புகளின் அடர்த்தி குறைவதுதான் ஒஸ்டியோபொரோசிஸ் நோயாகும். இந் நோயிருந்தால் எலும்புகள் உடைவதற்கான சாத்தியம் அதிகமாகும். வயதானவர்கள் பலரினதும் எலும்புகள் அடர்த்தி குறைவதனாலேயே அவர்களுக்கு எலும்பு முறிவு (Fracture) அதிகளவில் ஏற்படுகிறது.எவ்வளவு கல்சியம் உபயோகிக்க வேண்டும்? பகலிலா இரவிலா எடுப்பது நல்லது? சாப்பாட்டிற்கு முன்னரா பின்னரா? போன்ற பல சந்தேகங்கள் பாவனையாளர்களுக்கு எழுவதுண்டு.கல்சியம் என்பது ஒரு கனிமம். இது கார்பனேட், சிற்ரேட், லக்டேற், குளுக்கனேட் (carbonate, citrate, lactate, gluconate) போன்ற ஏதாவதொன்றின் கலவையாகவே கிடைக்கிறது. கல்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு பொதுவாக 500 மி;கி முதல் 1200 மி;கி வரையான கல்சியம் தினமும் மேலதிகமாகத் தேவைப்படும்.எடுப்பது கல்சியம் கார்பனேட் மாத்திரையாயின் அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது மேலானது. ஏனெனில் உணவு உண்ணும் போது சுரக்கும் அமிலமானது கல்சியம் குடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும். கல்சியம் கார்பனேட் மாத்திரைகள் விலை குறைந்தவை.கல்சியம் சிற்ரேட் மாத்திரையாயின் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம், அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அமிலம் குறைந்த நிலையிலும் இது இலகுவாக உறிஞ்சப்படுவதால், இரைப்பை புண்களுக்காக ஒமிபிரசோல் (Omeprazole) போன்ற மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் உகந்தது. மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறைவு. ஆனால் சற்று விலை கூடியது.கல்சியம் லக்டேற், கல்சியம் குளுக்கனேற் போன்றவை அடர்த்தி குறைந்தவையாதலால் மேலதிக கல்சியம் தேவைப்படுபவர்களுக்கு போதுமானவை எனக் கூறமுடியாது.இவற்றை காலை, மாலை, இரவு ஆகிய எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாத்திரைப் பெட்டியில் உள்ள குறிப்புத் துண்டினைப் பார்க்கவும். ஆயினும் ஒரு நேரத்தில் 500 மி;கி(mg) ற்கு மேற்பட்ட அளவில் எடுப்பது நல்லதல்ல. ஏனெனில் 500 மி;கி க்கு மேல் எடுக்கும்போது கல்சியமானது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்படுவது குறைவாகும். எனவே உங்கள் தினசரித் தேவை 1000 மி;கி எனில் அதனை 2 அல்லது 3 தடவைகளாளகப் பிரித்து எடுப்பது உசிதமானது.அத்துடன் ஏனைய மருந்துகளுடன் சேர்த்து எடுப்பதுவும் நல்லதல்ல. முக்கியமாக நுண்ணுயிர் எதிர் மருந்து (Antibiotic), உயர் இரத்த அழுதத்திற்கான மருந்துகளுடன் ஒரே நேரத்தில் சேரத்து உட்கொள்ளவும் கூடாது. ஏனெனில் அவை உறிஞ்சப்படுவதை கல்சியம் பாதிக்கும். இதனால் இம் மருந்துகள் தேவையான அளவு பலனைக் கொடுக்கமாட்டா.கல்சியம் மனிதர்களுக்கு நாளாந்தம் தேவைப்படுகிறது. ஆயினும் குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும், முதுமையிலும் இதன் தேவை அதிகரிக்கிறது. இளமையில் எலும்புகள் வளர்வதால் அதனை ஈடு செய்யவும், முதுமையில் எமது உடலானது கல்சியத்தை உறிஞ்சுவது பாதிப்படைவதாலும் அதிக கல்சியம் எடுக்க நேர்கிறது.எமது நாளந்தத் கல்சியத் தேவையை நாம் பொதுவாக பால், பால்மா, யோகொட், தயிர், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.பாலிலும், ஏனைய பாற் பொருட்களிலிலும் உள்ள கல்சியம் மிக இலகுவாக உறிஞ்சப்படுகிறதுகல்சியம் பற்றிப் பேசும்போது விட்டமின் டி (Vit D) பற்றியும் அறிந்திருப்பது நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், கல்சியம் சிறப்பாக உறிஞ்சப்படுவதற்கும் விட்டமின் டி எமது உடலுக்குத் தேவை. தினமும் 400 முதல் 800 யுனிட் தேவைப்படுகிறது. அதனையும் நாம் பொதுவாக பாற் பொருட்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறோம்.சூரிய ஒளியும் விட்டமின் டி யைக் கொடுக்கிறது. தினமும் 15 நிமிடமளவு சூரிய ஒளி பட்டால் போதுமானது.மத்திய தரை ரேகைக்கு அருகில் வாழும் எம்போன்றவர்களுக்கு போதிய வெயில் கிடைப்பதால் இது பாரிய பிரச்சனை அல்ல. மேலைநாட்டவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களுக்கு சூரியக் குளிப்புச் செய்தால்தான் இயற்கையாகக் கிடைக்கும்.இப்பொழுது பெரும்பாலான கல்சியம் மாத்திரைகளில் விட்டமின் டி யும் சேர்க்கப்பட்டுள்ளது.“ஆண்களுக்கு கல்சியம் மாத்திரைகள் தேவையா?” பலர் என்னிடம் கேட்கும் கேள்வி இது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வயதாகும்போது கல்சியம் உறிஞ்சப்படுவது குறைவடைகிறது. இதனால் எலும்பின் அடர்த்தி குறைகிறது. ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. இந் நிலையில் அவர்களும் விழுந்தால் உடைவுகள் ஏற்படுவது நிச்சயம். எனவே அவர்களுக்கும் கல்சியம் நிச்சயம் தேவை.

    Read more...

    கொத்தமல்லி


    கொத்தமல்லி மருத்துவ குணங்களும், ஒவ்வாமையும்
    “கொத்தமல்லிக்கு எமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு.” என்ற கருத்துப்பட மதிப்பிக்குரிய பேராசிரியர் ஒருவர் அண்மையில் நடந்த குடும்ப வைத்தியர்களுக்கான கருத்தரங்கில் பேச்சு வாக்கில் சொன்னார். அவரது பேச்சின் பொருள் வேறானதால் இதற்கான மருத்துவ ஆய்வுத் தகவல்களை தரவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. “இதற்கு மருத்துவ ஆய்வு ஏன்? அனுபவ ரீதியாக நாங்கள் எத்தனை தடவைகள் உணர்ந்திருக்கிறோம்.” என நீங்கள் சொன்னால் அதனோடு ஒத்துப் போகவும் நான் தயாராகவே உள்ளேன். மேற் கூறிய கருத்தரங்கிற்குப் பின்னர் தடிமன், உடல் அலுப்பாக இருந்தபோது பரசிட்டமோல் போடுவதற்குப் பதிலாக மல்லிக் குடிநீர் குடித்துப் பார்த்தேன். பல மணிநேரங்களுக்குச் சுகமாக இருந்ததை அனுபவத்தில் காண முடிந்தது. சிறு வயதில் அம்மா அவித்துத் தந்த குடிநீரை பல தடவைகள் குடித்திருந்தபோதும் அதன் பலன்கள் பற்றி இப்பொழுது தெளிவாகச் சொல்வதற்கு முடியவில்லை. இருந்போதும் இன்றும் தடிமன் காய்ச்சலுக்காக மருந்துவரிடம் செல்லும் பலர் அதற்கு முன்னர் மல்லி சேர்ந்த குடிநீர் உபயோகித்ததாகச் சொல்வதுண்டு. இதன் அர்த்தம் என்ன? பலருக்கும் முதல் உதவியாக, கை மருந்தாக அது உதவுகிறது என்பதே. அதற்கு குணமடையாவிட்டால் நவீன மருத்துத் துறை சார்ந்தவர்களை நாடுகிறார்கள். இணையத்தில் தேடியபோது தடிமன் காய்ச்சல், மூட்டு வலிகள், உணவு செமிபாடின்மை, பசியின்மை, ஒவ்வாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க கொத்தமல்லி உதவும் எனப் பலரும் எழுதியிருந்தார்கள். இவை பெரும்பாலும் அனுபவக் குறிப்புகள். சில வீட்டு வைத்திய முறைகள். ஆயினும் இவை எதுவுமே விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இல்லை என்பது ஏமாற்றத்தை அளித்தது. வாசனைத் ஊட்டிகள்

    (Spices) பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ந்து பார்த்தால் கொத்தமல்லி பற்றிய பதிவு மிகவும் தொன்மையானது எனத் தெரியவரும். பைபிளில் இது பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உண்டு. நாம் அவற்றின் விதைகளையும், தளிர்களையும் சமையலில் பயன்படுத்துகிறோம். முன்னைய காலங்களில் பல்லி மிட்டாய்களின் உள்ளே சீரகம், மல்லி ஆகியவற்றை வைத்திருந்தமை சிலருக்கு ஞாபகத்தில் வரலாம். ஆயினும் கொத்தமல்லி என்பது விதை அல்ல. உண்மையில் அது காய்ந்த பழம் என்பதையும் குறிப்பட வேண்டும். தாய்லாந்தில் அதன் தளிரும், வேரும் சேரந்த பேஸ்ட்

    (Paste) உணவுத் தயாரிப்பில் முக்கியமானதாம். கொத்தமல்லி மிகவும் பாதுகாப்பான உணவு என்று நம்பப்பட்ட போதும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பது மருத்துவ ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

    50 and 56 kDa, 11 kDa ஆகிய ஒவ்வாமையை ஏற்படுத்தும்

    (Allergns ) பொருட்கள் அதிலுள்ளனவாம். கொத்தமல்லி மாத்திரமின்றி அதைப்போன்ற அபியேசியே

    (Apiaceae) இனத்தைச் சார்ந்த வேறு பல கறிச்சரக்கு மூலிகைகளுக்கும்

    (Coriander, Caraway, Fennel and Celery) இவ்வாறு ஒவ்வாமை ஏற்படலாம் என அறியப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியதும் கொத்தமல்லி அலர்ஜிப் பண்டம் அதைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்துவிடாதீர்கள். உணவு அலர்ஜி என்பது குறைவாகவே மக்களைப் பீடிக்கிறது. அவ்வாறான உணவு அலர்ஜிகளிலும் கறிச்சரக்கானது வெறும் 20சதவிகிதம் மட்டுமே. கறிச்சரக்கில் சேர்க்கப்படும் பல்வேறு பொருட்களில் மல்லியும் ஒன்றுதான். எனவே மல்லியை அலர்ஜி என ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும் உணவு அலர்ஜி உள்ளவர்கள் தமது ஒவ்வாமைக்கான காரணங்களாக நண்டு, இறால், கணவாய், அன்னாசி, தக்காளி எனப் பட்டியல் இடும்போது கறிச்சரக்குக்காக இருக்குமா என்பதையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

    Read more...

    கம்பெனி இல் நான்


    நான் மற்றும் ஜேம்ஸ் ,ஜேம்ஸ் நல்ல ஒரு நண்பன் ,இந்த இரண்டு வருட காலங்களில் அவருடன் பனிபுரிந்த நாட்கள் மறக்கமுடியாதவை .இப்பொது எங்களிடமிருந்து விலகி சென்று விட்டார் வாழ்க வளமுடன்

    Read more...

    பழ. நெடுமாறனுடன் நான்

    >> புதன், 12 நவம்பர், 2008

    10.11.2008அன்று கடலூர் இல் நடந்த ஈழ தமிழர் விழா
    இந்த விழாவில் நான் ,கோவிந்தராஜ் மற்றும் லெனின் கலந்துகொண்டோம்

    Read more...

    >> திங்கள், 10 நவம்பர், 2008

    ௧0.௧௧.௨00௮ இன்று cudalore இல் நடத்த


    Read more...

    About This Blog

    என்றும், எங்கும், எப்போதும்
    தோல்விகள் துரத்தி அடிக்கிறது
    உரிமை, புரட்சி, எழுச்சி
    வார்த்தைகளின் வறட்சி
    நொறுங்கிப் போகிறது கொள்கை கோட்பாடு...!

    Lorem Ipsum

    வந்து போனவங்க

      © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

    Back to TOP