பசி.. புசி

>> சனி, 7 நவம்பர், 2009



உண்ணா நோன்பு உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டு வருகின்றது. வரம்பு மீறாத உண்ணாநோன்பால் நமது மூளை அதிக விழிப்புணர்ச்சியை அடைகிறது என்று கூறுவர். உண்ண ஏதுமின்றி பசித்திருப்போருக்கு வேறு வழியில்லை. எல்லாம் இருந்தும் உண்ணாமல் பசித்து இருப்பது என்பது உடல் கட்டுப்பாடு, உணர்வு கட்டுபாடு ஆகியவற்றால் மூளை செயல்பாடுகளை வளர்த்து உயிரை தழைக்க செய்யவே. உடல் நலத்தோடு உள்ளவர்கள் வழக்கமாக உண்பதைவிடக் குறைவாக உண்ணலாமா? நிச்சயமாக உண்ணலாம். பொதுவாக நமக்கு ஒரு நாளைக்கு 2600 கலோரிகள் தேவை. குறைந்தது 1300 முதல் 1500 கலோரி வரையே போதுமானது. நாம் உண்ணும் உணவு வகைகள் சத்துணவாக இருந்தால் அவற்றில் பாதியளவு உண்டாலே போதுமானது. உடல் நலம் பெற உணவு பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளை பற்றி இன்று அறிய தருகின்றேன்.
வயது அதிகமாக ஆக, ஆண்களும் பெண்களும் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவிலுள்ள கலோரி அளவை குறைத்தால் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்க முடியும் என்று ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் வழக்கமான உணவிலுள்ள கலோரி அளவில் ஏறக்குறைய 30 விழுக்காடு குறைத்தவர்கள், பின்னர் நடத்தப்பட்ட நினைவாற்றல் சோதனையில் நன்றாக தேறி இதை உறுதி செய்துள்ளனர். இந்த ஆய்வு பற்றி குறிப்பிடும்போது வயதாகும் வேளையில் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் வளர்க்க எதையெல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றிய ஆய்வுகளில் ஒன்று தான் இது என்று முன்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் முனைவர் எ. வெரோணிக்காவும், அவரது குழுவினரும் தேசிய அறிவியல் கழக இதழில் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வை அவர்கள் முதலில் எலிகளை வைத்து நடத்தினர். எளிதாக கரைந்துபோகும் கொழுப்பமிலங்கள் கொண்ட ஆலீவ் மற்றும் கலோரி அளவு குறைந்த எண்ணெய், மீன்கள் ஆகியவற்றை இவ்வாய்வில் பயன்படுத்தினர். இவற்றை உட்கொள்வது வயதான எலிகளின் மூளை செயல்பாடுகளுக்கு நல்லதாகவும், நினைவாற்றலை வளர்க்க உதவுவதும் தெரியவந்தது. இதேபோன்ற விளைவுகள் மனிதரில் ஏற்படுமா? என்றறிய ஆய்வாளர்கள் முற்பட்டனர். அதற்கு 60 வயதான சராசரி எடையுடைய 50 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து இந்த ஆய்வை நடத்தினர். ஒரு குழுவுக்கு 30 விழுக்காடு குறைவான கலோரி அளவுடைய உணவுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது குழுவினருக்கு அளிக்கப்பட்ட உணவு வகைகளில் எளிதாக கரைந்துவிடக்கூடிய கொழுப்பமில உணவுகள் 20 விழுக்காடு அதிகமாக இருந்தன. மூன்றாவது குழுவினருக்கு வழக்கமாக உடகொள்ளும் உணவே பரிமாறப்பட்டது. மூன்று திங்கள் காலம் இந்த உணவு பழக்கம் தொடர்ந்தது. பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், உணவில் 30 விழுக்காடு கலோரி அளவு குறைக்கப்பட்ட குழுவினருக்கு சொற்கள் தொடர்பான நினைவாற்றலில் 20 விழுக்காடு கூடுதலான வளர்ச்சி காணப்பட்டது. மாறாக பிற இரண்டு குழுக்களிடமும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.

30 விழுக்காடு கலோரி அளவு உணவு குறைவாக வழங்கப்பட்ட குழுவினர் நினைவாற்றலில் வளர்ச்சியடைந்த அதேவேளையில் இன்சுலின் அளவு மற்றும் உடல் வீக்க அறிகுறிகள் குறைவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளின் படி, வயது அதிகமாகின்றபோது உண்ணுகின்ற உணவுகளில் கலோரி அளவை குறைத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முதிய வயதில் நலமான வாழ்வை பெற மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வளர்க்க உதவும்.

உணவு தொடர்பாக நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் பசியை கட்டுப்படுத்துவதில் பெண்களை விட ஆண்களே அதிக திறமையானவர்கள் என தெரியவந்துள்ளது. பசியோடு இருக்கும்போது தாங்கள் விரும்பிய உணவை ஒரு தட்டில் வைத்தால், அதை உட்கொள்ளமால் இருக்க பெண்களுக்கு சற்று கடினமாக இருக்குமாம். உணவை உட்கொள்வதற்கு ஏற்படும் உந்துதலை கட்டுப்படுத்துவதில் பெண்கள் தவிக்கத்தான் செய்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. பெண்கள் சீரற்ற உணவு பழக்கங்களை வளர்த்து கொள்வதையும் ஆண்கள் தங்கள் எடையை எளிதாக குறைக்க முடிவதற்கான காரணத்தையும் இதன் மூலம் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது, பெண்கள் பசியாக இருக்கும் நேரத்தில் கலோரி அளவு, ஊட்டசத்து, கொழுப்பு சத்து என எதையும் கவனிக்காமல் அந்த நேரத்தில் கிடைக்கும் உணவை உண்டுவிடுகின்ற காரணத்தை இந்த ஆய்வு விளக்குகிறது.

ஒருவர் ஆணா இருப்பதோ அல்லது பெண் இருப்பதோ பசியை தாங்கி கொள்ளும் ஆற்றலில் செல்வாக்கு ஏற்படுத்துமா? என்று அறிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை செயல்பாடுகள் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டன. நலமான மற்றும் உடல் பருமனில்லாத தொண்டர்களை 17 மணிநேரம் உண்ணாமல் இருக்க ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு வகைகளை அவர்களுக்கு முன் வைத்தனர். பசித்த பின் புசி என்பார்கள். ஆனால், அந்த பசியின் கொடுமையிலும், அருகில் விரும்பிய உணவு வகைகள் இருந்தபோதும், பசியை கட்டுப்படுத்திக் கொண்டு உண்ணமுடியாத மரம், கல், மண் போன்றவற்றை நினைக்க ஆய்வாளர்கள் கூறினர். நியூயார்க்கிலுள்ள Brookhaven தேசிய ஆய்வகத்தில் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் Gene-Jack Wang தொண்டர்களின் மூளை செயல்பாடுகளை வரிமம் செய்தார். அதன்மூலம் பசியோடு இருக்கின்றபோது அருகிலிருக்கும் உணவு எவ்விதமான தூண்டுதலை மூளையில் ஏற்படுத்துகிறது என்று சோதித்தார்.

17 மணிநேரம் பசியோடு இருந்தபோதான மூளையின் செயல்பாடுகளை விட, ஆண்கள் கண்முன் உணவிருக்க சாப்பிட முடியாமல் கல்லையும் மண்ணையும் நினைத்து பசியை அடக்க வேண்டிய நிலையில் அந்த செயல்பாடுகள் குறைந்திருந்தன. ஆனால் பெண்களை பொறுத்த வரை முன்பிருந்த மூளை செயல்பாடுகளில் எந்த மாறுதல்களும் காணப்படவில்லை. எனவே பசியின்போதும் ஆண்களால் உணவு பழக்கத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்றும் பெண்களால் அது அவ்வளவு சாத்தியமில்லை என்றும் அறிய வந்தனர். இந்த ஆய்வு தேசிய அறிவியல் கழக இதழில் வெளியாயிற்று.

உணவு ஆசைகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாததே பெண்கள் எடை குறைக்க மேற்கொள்ளும் உணவு கட்டுப்பாடு முயற்சிகளில் வெற்றிபெற முடியாமல் போகிறது என்று மருத்துவர் Wang குறிப்பிட்டார். இவ்வாறு பசியை தாங்கிகொள்ளாத நிலை தான் உடல் பருமன் மற்றும் சீரற்ற உணவு பழக்கவழக்கங்களை பெண்களில் அதிகம் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். பசிக்கிறது அதனால் உண்டோம் என்றில்லாமல் முதிய வயதில் நாம் உட்கொள்ளும் கலோரி அளவை குறைத்து கொள்வதும், பசியோடு இருக்கும்போது உணவை உண்பதில் நம்மில் ஏற்படும் தூண்டுதலை உணர்ந்து செயல்படுவதும் நமது நாளைய உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

Read more...

வீழவில்லை விடுதலைப் புலிகள்! ஓயவில்லை தமிழீழ விடுதலைப் போர்!

>> செவ்வாய், 21 ஜூலை, 2009

“தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும் அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்துலகத் தயார்ப்படுத்தல்களையும் செய்து வருகிறது என்பதுதான் உண்மையாகும்.
சிங்கள அரசின் இந்தப் பெரும்போரைத் துணிவுடன் எதிர் கொள்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை.
“....வரப்போகும் போர்க்காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர் கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்கத் தயாராவோம்”.
- தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்புர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் முகப்புக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் இவை. எழுதப்பட்டது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்!
2008 ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்ட்தில் தொடங்கிய நான்காம் ஈழப்போர் 2009 மே 19 ஆம் நாள்வரை நீடித்தது. இப்போரில் விடுதலைப்புலிகள் ‘ஒழிக்கப்பட்டுவிட்டதாக’ சிங்கள அரசும், இந்திய அரசுத் தலைமையும் தம்பட்டம் அடித்து வருகின்றன. மறுபுறம், ‘விடுதலைப்புலிகள் தோல்வியைத் தழுவியதாகவும் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது’ என்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ‘அடையாளத்துடன்’ சிலர் அறிக்கைகள் வெளியிடுகின்றனர்.
தமிழகத்திலும் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் இயங்கும் பிழைப்புவாத ஒட்டுக்குழுக்கள், ‘புலிகள் அரசியல் மீது நம்பிக்கையற்ற’ செயல்பாட்டால் தான் அழிந்து போனார்கள்; அவர்கள் அழிவிற்கு அவர்களே காரணம்’ என்று காகிதக் கிறுக்கர்களாக உளறிக் கொண்டிருக்கின்றனர்.
இம்மூன்று தரப்புகளுமே, சிங்கள் இந்திய கூட்டுச் சதிகாரர்களின் மூன்று முகங்கள் என்பதே உண்மை! நான்காம் ஈழப்போர் குறித்த நேர்மையான திறனாய்வை முன் வைத்து அப்போர் குறித்த நான்காவது கோணத்தை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், சிங்களப் பேரினவாதம் கற்றுக் கொண்ட பாடம் ஒன்று உண்டு. ‘தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ அடிப்படையில் வெல்ல இயலாது’ என்பதே அப்பாடம்.
இதே பாடத்தை இந்தியா 1987 முதல் 1989வரை வெகு சிறப்பாக கற்றிருந்தது. சிங்களப் பேரினவாதத் தலைமை 1989 முதல் 2005 வரையிலான பதினாறு ஆண்டுகளும் தொடர்ச்சியான இராணுவப் பின்னடைவுகளை மட்டுமே சந்தித்து வந்தது. இதே காலகட்டத்தில், விடுதலைப்புலிகள் தமிழீழ நிலப்பரப்பின் பெரும்பகுதியைத் தமது ஆளுகைக்குள் கொண்டு வந்து, ஒரு தேசிய அரசையே நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.
‘தமிழீழ தேசத்தைச் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முழக்கத்தைத் தமிழகத்தில் நாம் முன் நிறுத்திப் போராடினோம். புலிகளும் இக்கோரிக்கையை மையமாகக் கொண்டே புலம்பெயர் தமிழர் அரசியலை முன்னேடுத்தனர். இதே பதினாறு ஆண்டு காலத்தில், இந்தியா தனது சதி வலையைத் தமிழீழத்தைச் சுற்றி விரிக்கத் தொடங்கியது. தமிழீழ விடுதலைப் போரை இயக்கும் காரணிகளாக இருந்தவை;
களம் : தமிழீழம் - விடுதலைப்புலிகள்
பின்களம் 1 : தமிழ்நாடு - தமிழ்த் தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகள், உதிரி உணர்வாளர்கள்
பின்களம் 2 : புலம் பெயர் நாடுகள் - புலிகள் இயக்கத்தின் பல்வேறு கிளை அமைப்புகள்.களத்தில் புலிகள் வலுவாக நிற்பதற்கு, பின்களங்கள் இரண்டின் உறுதுணையும் அவசியமாக இருந்தது. இந்தியச் சதிகாரர்கள் களத்தில் கண்ட தோல்வியிலிருந்து படிப்பினை பெற்றவர்கள். ஆகவே, அவர்கள் மீண்டும் களத்தில் மோத விரும்பவில்லை.பின்களம் 1
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, போலி இடதுசாரிகள் மற்றும் பிழைப்புவாத ஒட்டுக்குழுக்கள் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் தமிழீழ விடுதலையைக் கோட்பாட்டளவில் ஏற்றுக் கொண்டிருந்தன.
ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, புலிகளை எதிர்க்கும் நிலையை எடுத்த கட்சிகள் கூட, வெளிப்படையாக தமிழீழ விடுதலையை ஆதரிப்பதாகவே காட்டிக் கொண்டன. இதற்கான புறநிலைத் தேவை, தமிழர்களிடமிருந்து வந்தது இதன் காரணம். தமிழ்த் தேசிய அரசியலை முன் வைக்கும் கட்சிகள் எவ்வித சமரசமுமின்றி புலிகள் ஆதரவு நிலையைத் தொடர்ந்து கடைபிடித்தன.
ஈழப் போராட்டத்தின் முதல் பின் களம் என்ற வகையில், தமிழகம் இந்தியச் சதிக் கும்பலின் முதல் இலக்கானாது. இலங்கை இனச்சிக்கலில் தமிழினப் பகைமையை முதன்மைப்படுத்தியே இந்தியா தனது நிலைபாட்டை வகுத்தது. தமிழ் ஈழம் அமையவிடக்கூடாது, தமிழகத்தில் இன உணர்ச்சி எழுச்சி கொள்ளவிடக்கூடாது என்பதே இந்திய அரசு எடுத்த நிலைபாடு.
1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ‘உலகமயப் பொருளாதாரம்’ ஈழவிடுதலைப் போரை எதிர்க்க உலகநாடுகளின் ஆதரவைத் திரட்ட வாய்ப்பளித்தது.
• தேசிய இன அடையாளங் களை ஒழிப்பதே உலகமயத்தின் அடிப்படையென்பதால், பிற முதலாளிய நாடு கள் இந்தியாவின் திட்டத்தை ஏற்றன.
• உலகமயமாக்கலின்போது பெரு நிறுவனங்களால், பணம் வாரியிறைக்கப்பட்டது. இதன் விளைவாக, தமிழகத் தேர்தல் கட்சிகள் பெரு நிறுவனங்கள் போல வளர்ந்தன.
• 1991ஆம் ஆண்டுக்கு முன்புவரை, தமிழின எதிர்ப்பு மண்டல ஆதிக்க நலன் என்ற வகைகளில் மட்டுமே தமிழீழக் கோரிக்கையை இந்தியா எதிர்த்து வந்தது. உலகமயத்தின் வருகை இச்சிக்கலை ‘உலக ஆதிக்க நாடுகளின் நலன் சார்ந்ததாக’ மாற்றியது. அதாவது இந்திய நலனும் பிற வல்லாதிக்க நாடுகளின் நலன்களும் ‘உலகமயம்’ எனும் கண்ணியால் இணைக்கப்பட்டன.
• பயங்கரவாதம், பிரிவினை வாதம் ஆகியவற்றிற் கெதிராக என்று சொல்லி தடா, பொடா உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்கள் இக்காலத்தில் ஏவிவிடப்பட்டன.
மேற்கண்ட காரணிகள் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக இயங்கும் தமிழகத்தின் செயல் வேகத்தை வெகுவாகக் குறைத்தன. உலகமய ஆதிக்கம் - தேசிய இன ஒடுக்குமுறை, இவையிரண்டும் இணைந்து செயல்படத் துவங்கியதால் தான், தமிழகத் தேர்தல் கட்சிகள் ‘தீவிர இந்திய தேசபக்த’ நிலையை எடுத்தன.
இக்கட்சிகள் தமிழக எல்லையைக் கடந்து, இந்திய அளவில் சுரண்டிக் கொழுக்கும் நிறுவனங்களாக வளர்ந்தது இக்காலத்தில் தான் என்பதைக் கவனிக்க வேண்டும். தமிழின உணர்வை அரசியல் முழக்கமாகக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள், தேர்தல் கட்சியாக மாற்றப்பட்டு கடந்த தேர்தலில் ஈழ இன அழிப்பை ஆதரிக்கும் நிலையை எடுத்த வரலாற்றைப் பொருத்திப் பார்த்தால், மேற்கண்ட கூற்று எளிதில் விளங்கும். இன உணர்வை முன்வைத்த பா.ம.க. இத்திசையில் ஏற்கெனவே வளர்ந்துவிட்ட பெரிய அரசியல் கம்பெனியாகும். இவற்றுக்கெல்லாம் முன்னதாக அனைத்திந்திய அரசியல் சந்தையில் கலந்துவிட்டது ம.தி.மு.க.
தமிழ்த் தேசிய இன நலன்களை முன்னிறுத்துவதைக் கைவிட்டு, இந்திய ஏகாதிபத்தியத்தின் அங்கத் தினராகவோ, அடிவருடிகளாகவோ அவரவர் தகுதிக்கேற்ப மாறினால் பெருமளவு சுரண்டிக் கொள்ளலாம் என்பதே இந்தியா தமிழகத்திற்கு வழங்கிய வாய்ப்பு.
இவ்வாய்ப்பை நிராகரித்த உறுதியான தமிழ்த் தேசியர்கள் கடந்த 16 ஆண்டுகளில் எண்ணற்ற வழக்குகளில் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வித நடவடிக்கைகளின் வழி, தமிழீழ விடுதலைப் போருக்கான ஆதரவு, அதன் முதன்மைப் பின்களமான தமிழகத்தில் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இது இந்தியாவின் திட்டமிட்ட நீண்டகால வேலைத்திட்டத்தின் வெற்றியாகும்!
பின்களம் 2
புலம் பெயர் தமிழர்களின் இணையற்ற ஆதரவு, புலிகள் இயக்கத்தின் விரைவு வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தின. தொழில்நுட்பம், நிதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பல்வேறு நாடுகளிலிருந்து இயங்கிய புலிகளின் துணை அமைப்புகள் நிறைவேற்றி வந்தன. உலகமயத்தின் பெயரால் கைகுலுக்கிய இந்திய – அமெரிக்க ஏகாதிபத்தியங்கள், தமது தமிழீழ எதிர்ப்பு நிரலை அரங்கேற்றத் தொடங்கின.
1997 ஆம் ஆண்டு - அமெரிக்கா2001 ஆம் ஆண்டு - பிரிட்டன்2006 ஆம் ஆண்டு - ஐரோப்பிய யு+னியன்2006 ஆம் ஆண்டு - கனடா
என ‘உலகமய’ ஏகாதிபத்தியங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தத்தம் நாடுகளில் தடை செய்தன. இந்நாடுகள் புலிகள் மீது தடை விதிப்பதற்குக் காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்தன. கனடா விதித்த தடைக்குப் பின்வரும் காரணம் கூறியது: ‘விடுதலைப்புலிகள் இயக்கம் கனடா வாழ் தமிழரிடையே நிதி சேகரிப்பதற்காக வன்முறையில் ஈடுபடும் அபாயம் உள்ளது’. எள்ளளவும் நியாயமற்ற காரணங்களைக் கூறி, இந்திய – அமெரிக்க சிங்கள கூட்டணி நாடுகள் புலிகளின் சர்வதேச நடவடிக்கைகளை முடக்கின. இதே காலகட்டத்தில் மொத்தம் 32 நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன என்பது கவனிக்கத்தக்கது.
இந்நடவடிக்கைகள் அனைத்தும், தமிழீழ தேசிய இன விடுதலைக்கு எதிரான ஏகாதிபத்திய கூட்டுச் சதியின் விளைவுகளே. இரண்டாம் பின் தளம் இவ்வாறாக பலவீனப்படுத்தப்பட்டது. வல்லாதிக்க நாடுகளின் நலன்களுக்கு இலங்கைத் தீவைப் பலி கொடுத்துதான் சிங்களம் இவ்வளவையும் சாதித்தது. இதே வேளை, தமிழீழ விடுதலைப்புலிகள் எந்த வல்லாதிக் நிர்பந்தத்திற்கும் பணியாமல் நிமிர்ந்து நின்றனர். இதற்குக் கிடைத்த பதிலடியே மேற்கண்ட தடைகளும் நெருக்கடிகளும்!
1989 முதல் 2005 வரையிலான பதினாறு ஆண்டுகளும் இந்திய – சிங்கள கூட்டுச் சதிகாரர்கள் தந்திரமாக, நேர்மையற்ற வழிகளில் செயல்பட்டு, தமிழீழ விடுதலைப் போரின் பின்களங்கள் இரண்டையும் பலவீனப்படுத்தின!இதற்குப் பிறகே, தமது இறுதி இலக்கான தமிழீழக் களத்தில் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிங்களம். இப்பெரும் போரில் சிங்களத்தின் முதன்மைப் பின்களமாக இந்தியாவும், இரண்டாம் பின்களமாக பிற வல்லாதிக்கநாடுகளும் செயல்பட்டு, தமிழீழத்தின் மீதான பெரும் போரை நடத்தின! இவ்வளவு சீர்குலைவு களைச் செய்த பிறகும், விடுதலைப்புலிகளை அவர்களது களத்தில், சந்திக்க அஞ்சிய சிங்கள - இந்திய வல்லாதிக்க சதிகாரக் கூட்டு நாடுகள், தமது நோக்கத்தை நிறைவேற்ற ஓர் கொடூரத் திட்டத்தை தீட்டின. ‘பீக்கான் திட்டம்’ (Project Beacon) என்பது அத்திட்டத்தின் பெயர்.
பீக்கான் திட்டம்
பீக்கான்(Beacon) என்றால்,‘திக்குத்தெரியா இடத்தில் வழிகாட்டி அழைத்துச் செல்லுதல்’ என்று பொருள். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பீக்கான் திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது. சிறீலங்கா, இந்தியா உள்ளிட்ட இருபது இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் கூடி சதியாலோசனை செய்து இத்திட்டத்தை தீட்டினர்.
பீக்கான் திட்டத்தின் சாரம் இதுதான்:
• இத்திட்டத்தின் நோக்கம் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டுவது.
• 2006 மே மாதம் இத்தட்டம் துவக்கப்பட வேண்டும்
• 2009 மே மாதம் திட்டம் முடிக்கப்பட வேண்டும்
• புலிகள் இயக்கத்தில் எஞ்சியுள்ளோரைத் துடைத்து அழிப்பதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, 2011 மே மாதம் இதன் கால எல்லை.
• பீக்கான் திட்டம் 2005 திசம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
• புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு மூன்று கடலோரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு ஆண்டுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று ஆண்டுகளில் (2006-2009) மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
• முதல் பிரிவு (2006-2007) திருகோணமலையில் உள்ள சம்பூர் முதல் மட்டக்களப்பு பனிச்சங்கேணி வரையிலான கரையோரப் பகுதிகளும் இவற்றோடு இணைந்த நிலப்பகுதிகளும்.
• இரண்டாம் பிரிவு (2007-2008) மன்னார் முதல் பூநகரி வரையிலான கரையோரப் பகுதிகளும், இவற்றோடு இணைந்த நிலப்பகுதிகளும்..
• மூன்றாம் பிரிவு (2008-2009) ஆணையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதிகளும் இவற்றோடு இணைந்த நிலப்பரப்பும்.
பீக்கான் திட்டத்தின்படியே கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழீழக்களம் இயங்கியது என்பதை மேலேயுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2006 ஏப்ரல் 25 ஆம் நாள் சம்பு+ரில் முதல் விமானக் குண்டு வீச்சில் சிங்கள இராணுவம் ஈடுபட்டது. நான்காம் ஈழப்போர் துவங்கிய நாள் இதுவே.
விடுதலைப்புலிகள் பீக்கான் திட்டத்தைத் தொடக்கத்திலேயே அறிந்திருந்தனர். புலிகளின் ஆதரவு இணையதளமான (தமிழ் எடிட்டர்ஸ்.காம் - tamileditors.com) பீக்கான் திட்டம் குறித்த விரிவான கட்டுரையை 2007 ஆம் ஆண்டிலேயே எழுதியிருந்தது. ‘இராணுவத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்தாமல், தற்காப்புச் சமர் புரிந்து கொண்டே பின்வாங்குவது’ என்பதே புலிகளின் போர்த்தந்திரமாக இருந்தது.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25- ல் சம்பூரில் முதல் குண்டு விழுந்தபோது, சர்வதேச நாடுகள் சிங்கள அரசைக் கண்டித்து வாய் திறக்கவே இல்லை. அது ‘சமாதானக் காலம்’. புலிகளும் சிங்கள அரசும் நார்வே தலையீட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்த காலம். இருந்தபோதிலும், சிங்கள இனவெறி அரசின் அத்துமீறுலை உலகம் கண்டும் காணாதிருந்தது. காரணம் - சம்பு+ரில் விழுந்த குண்டு சிங்கள இராணுவத்திற்கு மட்டும் சொந்தமல்ல் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கும் சொந்தமானது.
பீக்கான் திட்டத்தின் நோக்கம் ‘விடுதலைப்புலிகளை அழிப்பது’ என்று சொல்லப்ப்டாலும், அதன் முதன்மை நோக்கம் தமிழீழத் தேசிய இனத்தையே அழிப்பது தான்!
பீக்கான் திட்டத்தின் முதன்மையான அம்சம் என்னவெனில், ‘தாக்குதலின் போது, அதிகப்படியிலான விமானக் குண்டு வீச்சிலும், பல்குழல் எறிகணை வீச்சிலும் ஈடுபடுவது அவசியம்’ என்பதாகும். இத்தாக்குதல்களின் நோக்கம் பேரளவில் பொதுமக்களைப் படுகொலை செய்வது என்பதே! இதன் வழி சிங்கள - இந்திய வல்லாதிக்கக் கூட்டுநாடுகள் அடைய விரும்பிய நலன்கள்:
1. ஆயிரக்கணக்கில் படுகொலைகள் செய்வதன் வழி, தமிழீழ இனத்தின் எண்ணிக்கையைக் குறைத் தல்.
2. படுகொலைகள் கட்டற்றுப் போகும் நிலையில், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு.
3. தொடர்குண்டு வீச்சுகளால் தமிழீழத்தின் வாழ் வாதாரங்களைச் சிதைத்து, மக்களை உள்நாட்டு ஏதிலிகளாக்குவது.
4. போரின்போது, விடுதலைப் புலிகள் தற்காப்பு நிலை எடுத்து பதுங்கிக் கொண்டால், பெருமளவு மக்களைப் பலி வாங்குவதன் வழி புலிகளைக் களத்திற்கு வரச் செய்து வழிப்பது.
பீக்கான் திட்டத்தின் வடிவமைப்பில் ‘இனப்படுகொலை’ இடம் பெற்ற போது, இதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று அஞ்சப்பட்டது. பீக்கான் திட்டத்தின் வடிவமைப்பாளர்கள் தமிழர் போராட்டம் வெடிக்கும் அபாயமுள்ள 12 நாடுகளைப் பட்டியலிட்டனர். இந்நாடுகளில் உள்ள தமிழர் தலைவர்கள் "பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தனர்’ என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட வேண்டும்’ என்று பீக்கான் திட்டம் வழிகாட்டியது.
கடந்த ஓராண்டாக இன அழிப்புக்கு எதிராக மேடையில் பேசிய குற்றத்தறிகாக தோழர்கள் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், பெ.மணியரசன் உள்ளிட்டோர் பலமுறை கைது செய்யப்பட்டதை பீக்கான் திட்டத்தின் மேற்கண்ட விதியோடு பொருத்திப் பார்க்க வேண்டுகிறேன்.
ஆகவே அனைத்தையும் சிங்கள இந்தியக் கூட்டுப்படையினர் ‘திட்டப்படியே’ நடத்தினர்!
‘பீக்கான் திட்டம்’ குறித்த அடிப்படைகளை அறிந்து கொண்டால் மட்டுமே நடந்து முடிந்த நான்காம் ஈழப் போரின் விளைவுகளை மதிப்பிட முடியும். இத்திட்டத்தின் அடிப்படைத் தந்திரோபாயங்களாக.
• பேரளவு இன அழிப்பை மேற்கொள்ளுதல், எதிர்க்க வரும் புலிகளை அழித்தல்
• சாரத்தில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக இராணுவத்தினர; முன்னே வைத்து, புலிகளின் போர்த் திறனைக் குறைத்தல்.
• இவற்றைச் சாதிப்பதற்காக சிங்கள ராணுவத்தின் பெருமளவு திறனையும் பயன்படுத்தல்.
• சிங்கள இராணுவத்திற்கு ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கவலைப்படாதிருத்தல்
• சிங்கள அரசின் நிதியாதரங்களை மட்டுமே நம்பி இவ்வளவு பெரிய திட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் சிங்கள அரசின் பேரளவு நிதி ஒதுக்கீட்டைப் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது. சிங்களர் வாழும் பகுதிகளுக்கான நிர்வாக நிதியுதவிகளை இணைத்தலைமை நாடுகள் கவனித்துக் கொள்வது.
தமிழீழ விடுதலைப் புலிகள் 2007ஆம் ஆண்டிலிருந்தே இப்பெரும் போருக்குத் தயாராகிவிட்டனர். 2007ஆம் ஆண்டு அனுராதபுரம் இராணுவத் தலைமையகம் மீது புலிகள் நடத்திய தாக்குதல் பீக்கான் திட்டத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையே என்பதை இப்போது உணர முடிகிறது.
‘நான்காம் போரை இராணுவ ரீதியில் வெல்ல இயலாது’ என்பதைப் புலிகள் உணர்ந்திருக்கக் கூடும். ஏனெனில், ‘நான்காம் போர்’ உண்மையில் ‘போர்’ அல்ல. அது ஒரு இன அழிப்பு நடவடிக்கை என்பதை பீக்கான் திட்டம் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது. இந்த அடிப்படையில் புலிகள் தமது தந்திரோ பாயங்களாகப் பின்வருவனவற்றை வகுத்தனர; எனக் கருதலாம்.
• இராணுவத்தினரை முன்னேறித் தாக்கி விரட்டுவது சாத்தியமல்ல. எனவே, தற்காப்புத் தாக்குதல்கள் மட்டும் நடத்துவது.
• இராணுவம் இன அழிப்பைத் தமது தந்திரோபாய நடவடிக்கையாகவும் கோட்பாட்டு இலக்காகவும் கொண்டுள்ளதுஎன்பதால், நிலப்பகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளப் போரிட்டால், பொதுமக்கள் உயிரிழப்பு அபாயகரமாக அதிகரிக்கும். எனவே, நிலப் பகுதிகளை விட்டு பின்வாங்கிச் செல்வது.
• ஏதிரிகளின் நோக்கம் புலிகளுடன் போரிடுவது மட்டுமல்ல. பொதுமக்களைப் பெரும் எண்ணிக்கையில், அழிப்பதும்தான் என்ற நிலையில், பொதுமக்களை ஆதரவற்றோராக விட்டுச் செல்லாமல், அவர;களையும் தம்மோடு அழைத்துச் சென்று பாதுகாப்பது.
• இலட்சக்கணக்கான பொதுமக்களோடு காடுகளுக்குள் சென்று சர்வதேச சமூகத்தின் மனச்சான்றை உலுக்கிப் போரை நிறுத்தச் செய்வது.
• முன்னேறி வரும் படையினரின் எண்ணிக் கையையும், தளவாட ஆற்றலையும் கணிசமான அளவில் குறைத்து விடுதல்.
பீக்கான் திட்டத்திற்கான எதிர்த் திட்ட வடிவம் என்றளவில் மேற்கண்ட தந்திரோபாயங்களைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர முடிகிறது. புலிகள் ‘மனிதக் கேடயங்களாக’ பொதுமக்களைப் பயன்படுத்தினர; என்று சிங்கள இந்திய கூட்டுச் சதி நாடுகள் கூக்குரலிட்டதன் உண்மையான பொருள் வேறு.
தமிழீழப் பகுதி முழுதும் வான் தாக்குதல்களாலும், பல்குழல் எறிகணைத்தாக்குதல்களாலும் இலட்சக்கணக்கான தமிழரைப் படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த இச்சதிகார நாடுகள், மூன்றரை இலட்சம் மக்களும் புலிகளின் பின்னால், பாதுகாப்பாகச் சென்றதைக் கண்டு ஏமாற்றமடைந்தன. மேலும், கிளிநொச்சி, பரந்தன் போன்ற சமவெளிக் களங்களில் புலிகளை எதிர்கொள்ளலாம் என்ற அவர்களது கனவும் கலைந்தது. புலிகளும் மக்களும் வன்னிக் காடுகளுக்குள் சென்றது, பீக்கான் திட்டத்தின் அடிப்படைத் தந்திரோபாயங்களை வலுவிழக்க வைத்தது.
2008 நவம்பர் முதல் 2009 ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களும் தற்காப்புத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு, பொதுமக்களையும் பேரழிவு களிலிருந்து பாதுகாப்பதில் புலிகள் வெற்றியடைந்தனர். ஏப்ரல் முதல் வாரத்தில் புலிகளின் எதிர்த்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத சிங்கள-இந்திய கூட்டு;ப்படை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியது.
இந்நெருக்கடியிலிருந்து மீளுவதற்காகவே புலிகள் மீது இரசாயண குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் விதுஷா, கடாஃபி, தீபன் உள்ளிட்ட ஏழு முன்னிலைத் தளபதிகளும் இருநூறுக்கும் மேற்பட்ட புலிகளும் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குப் பிறகுதான், பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிங்களப் படையினருடன் விடுதலைப் புலிகள் பெரியளவிலான தாக்குதல்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.
முதலாவது பின்களமான தமிழகத்தில் இன அழிப்பிற்கு எதிராக இந்தியாவை மிரட்டும் விதத்திலான எந்தப் போராட்டமும் நடக்க வில்லை. இரண்டாம் பின்களமான, புலம் பெயர் தமிழர் சமூகம் எழுச்சி கொண்டு போராடியது. இவ்வெழுச்சியைக் கண்ட மேற்குலக நாடுகள் தந்திரமாக, ‘விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைய வேண்டும். இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும்’ என்று அறிவித்தன. இரண்டு பின்களங்களும் ஒத்துழைக்காத நிலையில், களம் பலவீனப் பட்டது. பீக்கான் திட்டத்தின் படியே 2009 மே மாதம் போர; ‘முடிவுக்கு’ வந்தது. வீழவில்லை புலிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் நேர்ந்த கொடூர அனுபவத்திற்குப் பிறகும், புலிகள் தமது படையணி களையும், தலைவர்களையும், முதன்மைத் தளபதிகளையும் கள முனையிலேயே நிறுத்தி வைத்திருக்க வாய்ப்பில்லை.
மே 19ஆம் நாள் போர் ‘நிறுத்தப்பட்டதாக’ ராஜபக்சே அறிவிக்கும் வரை, புலிகளின் ;எந்தப் படையணியும் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் இல்லை. பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களை முறியடிக்க ஆங்காங்கு சில ‘முறியடிப்புத் தாக்குதல்கள்’ மட்டுமே நடத்தப்பட்டன.
இதே வேளை, விடுதலைப் புலிகளின் படையணிகள் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், ‘ஆயுதங்களை ஒப்படைக்கவும் தயார்’ என்று புலிகள் இயக்கம் அறிவித்தது. இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர; பா. நடேசன் சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக் கொடியுடன் சென்றபோது, சிங்கள வெறியர்கள் அவர்களைப் படுகொலை செய்தனர். பிறகு, மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களும் இடைநிறுத்தாது கனரக ஆயுதத் தாக்குதல்களை பாவித்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர். இதே மூன்று நாட்களும் மூன்று வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சம்பவங்களில் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.
புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற்புலிகள் தலைவர்; சூசை உள்ளிட்ட புலிகளின் ஒட்டு மொத்தத் தலைமையும் அழிக்கப்பட்டதாக இராணுவம் மார்தட்டிக் கொண்டது. பகுத்தறிவு கொண்டு ஆய்வு செய்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டார்கள் என்ற அறிவிப்பு ஒரு கட்டுக் கதை என்பதை உணரமுடியும். பீக்கான் திட்டத்தை நன்கு உணர்ந்து, தொடக்கம்; முதலே செயற்பட்ட புலிகள் தமது படைத் திறனை இறுதிவரை காத்து வைத்தனர் என்பதையும் மிகக் குறைந்த வலுவைக் கொண்டுதான் எதிரிகளுக்குப் பேரிழப்புகளை ஏற்படுத்தினர; என்பதையும் அனுராதபுரம் தாக்குதல் தொடங்கி இறுதித் தாக்குதல்கள் வரை காண முடிகிறது.
புலிகள் தமது ஆற்றல் வளங்களைக் கணிசமாகத் தக்க வைத்துக் கொண்டு, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டனர;. இதற்கேற்றவாறு புலிகளின் போரத்தந்திரங்கள் அனைத்தும் அறிவாரந்த முறையிலும் மிகுந்த நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டன. (புதிய தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியான சிங்களத்தின் இறுதிப்போர் - முதல் கட்டம், இரண்டாம் கட்டம் கட்டுரைகளைப் பார்க்க) ‘பீக்கான் திட்டம் மே மாதம் முடிவடையும்’ என்பது ஏற்கெனவே தெளிவான செய்தி. ஆகவே ‘மே மாதம் வரை போரில் நீடிப்பது,
பிறகு பாதுகாப்பான நிலைகளுக்குத் திரும்பி விடுவது’ என்ற செயல் திட்டம் புலிகளால் வகுக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்.
மே 15 முதல் 19 வரை யிலான தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்களும், புலிகளின் படையினருமே பேரளவில் படுகொலை செய்யப்பட்டனர். புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள் பா. நடேசன், புலித்தேவன் வஞ்சகமாகக் கொல்லப்பட்டனர். சில அரசியல் பிரிவுத் தளபதிகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகளின் முக்கியப் படையணிகள் முக்கியத் தளபதிகள் குறித்த எதிர்மறைத் தகவல்கள் ஏதும் ஆதாரப் பூர்வமாக இதுவரை வெளியாகவில்லை. எனவே, அவர்களனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்பலாம்.இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் சான்றுகள்:
• தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள இராணுவம் மட்டுமே அறிவித்துள்ளது. சிங்கள அரசின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சே இதுவரை அறிவிக்கவில்லை.
• சிங்கள இராணுவத் திற்குப் புதிதாக ஒரு இலட்சம் பேரைச் சேர்க்கவுள்ளதாக சிங்களத் தளபதி பொன்சேகா அறிவித்துள்ளார்.
• ஆஸ்திரேலிய அரசு புலிகள் இயக்கத்தின் மீது தடைவிதிக்க மறுத்தபோது, சிங்கள அரசு ‘விடுதலைப் புலிகள் இன்னும் ஒழிக்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் வளரும் அபாயம் உள்ளது’ என்று வாதிட்டது.
• ‘முல்லைத் தீவில் புதிய படைத் தளம் அமைக்கப்படும் என்று சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்ட நிலையில் புதிய தளம் எதற்கு? எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லை. அவர;கள் பல குழுக்களாகப் பிரிந்து நாடு முழுதும் பரவியுள்ளனர்’ என்றார் சிங்களஇராணுவ செய்தித் தொடர்பாளர் உதயநாணயக்காரா.
‘பீக்கான் திட்டத்தின்’ நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தவிடாமல், தமிழீழ விடுதலைப் புலிகள் தீரமிகுப் போரை நடத்தி முடித்திருக்கிறார்கள். கோழி இறக்கைகளுக்குள் குஞ்சுகளை வைத்துப் பாதுகாப்பது போல் மூன்றரை இலட்சம் மக்களை ஏழு மாதங்களாகக் காத்தனர்.
இந்திய வல்லாதிக்க அரசின் செயல்வேகத்தைக் குறைக்கும் அளவுக்கான போராட்டங் களையாவது தமிழகத்திலிருந்து எதிர்பார்த்தனர். அவர்களது எதிர்பார்ப்பாற்றலை நாம் நிறைவேற்றவில்லை. இந்திய வல்லாதிக்கத்தின் குரல்வளையை இறுக்குமளவு போராடினால் மட்டுமே, தமிழீழ விடுதலையின் களம் வலுப்பெறும். நாம் முதன்மைப் பின் களத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு நமக்கு வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது களத்தில் சந்தித்திருப்பது பின்னடைவு மட்டுமே! தோல்வி அல்ல! அவர்கள் வீழவில்லை! அவர்கள் மீண்டும் வருவார்கள். தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுப்பார்கள். இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.
இதே வேளை, களத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டம் வெற்றிபெறுவதற்கு முதன்மைப் பின்களமான தமிழகத்தில், தமிழ்த் தேசிய விடுதலை உணர்வு வலுப்பெற வேண்டும். பின்களப் போராட்டம் களத்திற்கு வலுவூட்ட வேண்டும். இது நம் தேசியக் கடமை. இதைச் செய்வதை விடுத்து, தமிழீழ விடுதலைப் போர் முடிந்துவிட்டதாகவும், புலிகள் வீழ்ந்து விட்டதாகவும் சிங்கள -இந்தியக் கூட்டுப் படை மேற்கொள்ளும் பொய்ப் பரப்புரைகளை நம்பினால், நாம் பிழை செய்தோர் ஆவோம்.

வீழவில்லை விடுதலைப் புலிகள்! ஓயவில்லை தமிழீழ விடுதலைப் போர்!

ந‌ன்றி ம.செந்தமிழன், எல்லாளன்

சான்றுகள் :
www.tamilcanadian.com –World Democracies Wake up: Stop Sri-Lankan terror - By: Dr C P Thiagarajah, TamilCanadian - November 1, 2007.2007.
www.thesamnet.co.uk (இந்த இணையதளம் தமிழீழ விடுதலைக்கு எதிரான, சிங்கள அரசுக்கு ஆதரவான ஒட்டுக்குழக்களால் நடத்தப்படுவது.; பீக்கான் திட்டம் மே மாதத்தோடு முடியப் போகிறது என்றும், புலிகள் இயக்கத்தின் தலைமைக்கு ஆபத்து என்றும் இந்த இணையதளம் ஏப்ரல் 2009ல விரிவான கட்டுரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

Read more...

உலகம் உறைய நேரிட்டால்

>> செவ்வாய், 18 நவம்பர், 2008

உலகம் உறைய நேரிட்டால்


THE DAY AFTER TOMORROW என்றொரு ஆங்கிலத் திரைப்படம். சூறாவளியும் வெள்ளபெருக்கும் நகரங்களை அழித்தொழித்து, மக்களின் உயிரை உறையவைப்பதாக இந்தப் படம் காட்டுகின்றது. "இதற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. உலகளாவிய காலநிலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது. என்னேனும் ஒரு நாள் கடுமையான பாதிப்பை அது ஏற்படுத்தியே தீரும்" என்று சீன அறிவியலாளர் DONG WENTIE கூறுகிறார்.

உலகளாவிய வெப்பமானது, பூமியை எப்படி உறையச் செய்யும் என்று, சாதாரன மக்கள் கேள்வி எழுப்பலாம். அல்லது புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கலாம். ஆனால், நிபுணர்கள் அதற்கான விளக்கத்தை தர முடியும். இந்த வெப்ப அதிகரிப்பானது, பனிப்பாறைகளை உருகச் செய்யும், கடலின் வெப்பநிலை குறையுமாறு செய்யும். அடுத்த 20 ஆண்டுகளில், உலகில், தீவிரவாதிகளால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும், இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று, அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

நிலப் பரப்பு, மூல வளம் ஆகியவை குறைந்து போவதன் காரணமாக ஏற்படும் இயற்கைச் சீற்றங்களினால், பிராந்திய முரண்பாடுகளினால், அல்லது அணு ஆயுதப் போரினால்-ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் கூடும் என்றும் அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது. உறைபனியிமான சைபீரியா போல பிரிட்டன் மாற வாய்ப்புண்டு, ஐரோப்பாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்க நேரிடலாம். இவையெல்லாம் உண்மையாக நடந்திடுமா என்று மக்கள் வியப்பில் ஆழ்ந்திடக்கூடும். உண்மையில்,

இத்தகைய மாற்றங்கள் நேரிட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்பது பொதுவான கருத்து. ஆக, THE DAY TFTER TOMWRROW திரைபாபடம் பயமுறுத்தும் போல், உடனடியாக ஏதும் நடந்திட வாய்ப்பில்லை. ஆனாலும், ஒரு நாள் இவ்வாறு நடைபெற நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதில் அறிவியலாளர் உடன்படுகின்றனர். "நாளை மறுநாள் இந்த உலகம் உறைந்து போகாமல் தடுப்பதற்கு-எதையெல்லாம் செய்ய இயலுமோ அவற்றைக் கண்டிப்பாகச் செய்திடுவோமாக!"

Read more...

புற்றுநோய் புதிய தகவல்

>> வெள்ளி, 14 நவம்பர், 2008

புற்றுநோய் புதிய தகவல் - I

உடலில் உள்ள செல்கள் எனப்படும் உயிரணுக்கள் வளர்ந்து பிரிந்து, உடலை நலமாக வைத்துக்கொள்ள தேவையான அளவுக்கு பல உயிரணுக்களை உண்டுபண்ணுகிறன. இவ்வாறு உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் சிதைவினை கட்டுப்படுத்தும் வளர்சிதை மாற்றத்தின் போது உடலுக்கு தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதான உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில், சிலவேளை இறக்காமல் இருந்துவிடலாம். இவ்வாறு இறக்காமல் அதிகரிக்கும் உயிரணுக்கள், திசுக்களின் கூட்டாகிய கட்டிகளை ஏற்படுத்துகிறன.

எல்லா கட்டிகளும் புற்றுநோயல்ல. அவற்றில் தீங்கில்லா மற்றும் தீங்கான கட்டிகள் உள்ளன. கேடுவிளைவிக்கும் தீங்கான கட்டிகள் தான் புற்றுநோயாகும். இதிலுள்ள உயிரணுக்கள் இயல்புக்கு மாறாக, எந்த கட்டுப்பாடுமின்றி பிரிவுற்று பெருகும். அப்படி பலுகிபெருகும் புற்று உயிரணுக்கள், அவற்றை சுற்றியுள்ள நல்ல திசுக்களுக்குள் சென்று அவற்றையும் அழித்துவிடும் ஆற்றல் கொண்டவை. புற்று உயிரணுக்கள் இரத்த ஓட்ட மற்றும் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்து, உடலின் பிற உறுப்புகளில் புற்றுநோய் கட்டிகளை ஏற்படுத்தும். இன்றுவரை தொடக்கத்திலேயே கண்டறிந்து கொள்ள முடியாத மற்றும் தீர்க்க முடியாத நோயாக தான் புற்றுநோய் இருந்து வருகிறது.

இது இவ்வாறிருக்க, பிரிட்டனிலுள்ள பதின்ம வயதினர் பலர் தொண்டை, கருப்பை, விரை மற்றும் தோல் தொடர்ப்பான புற்றுநோய்களால் துன்புறுவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 1979 முதல் 2003 ஆம் ஆண்டுகளில் வளரிளம் பருவத்தினரிடம் காணப்பட்டதை விட, தற்போதைய அதிகரிப்பு விகிதம் உயர்ந்துவருகிறது. இலண்டனில் "பதின்ம வயதினரிடம் புற்றுநோய்" என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வழங்கப்பட்ட ஆய்வின் முடிவுகளில் இது வெளிப்படுத்தப்பட்டது.

கடந்த முப்பதாண்டு காலத்தில் தொண்டை மற்றும் கருப்பை தொடர்பான புற்றுநோய் பெறுவது, பிரிட்டனிலுள்ள பதின்ம மற்றும் வளரிளம் பருவத்தினரை தவிர்த்து, இதர எல்லா வயதினரிடையும் குறைந்துள்ளது. ஆனால் 15 முதல் 19 வரையான பதின்ம வயதினரிடம் எறக்குறைய 7 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று பிரிட்டன் புற்றுநோய் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தோல் புற்றுநோய் எல்லா வயதினரிடையேயும் அதிகரித்தது. ஆனால் 35 முதல் 39 வயதினரிடம் ஆண்டுக்கு 2.5 விகிதம் மட்டுமே அதிகரித்தது. ஆனால் 20 முதல் 24 வயதினரிடத்தில் 7 விழுக்காடு அதிகரித்தது.

குடல், விரை, மூளை தொடர்பான புற்றுநோய் வகைகள் தான் வளரிளம் பருவத்தினரிடம் அதிகமாக காணப்படுகின்றன. என்றாலும் இந்த அதிகரிப்பு எதனால் ஏற்படுகின்றது என்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வகத்தின் குழந்தை மற்றும் குடும்ப ஆய்வுக்குழுவின் இயக்குனர் ஜில்லியன் பிர்ட்ச் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். பருவ வயதை அடையும்போது தூண்டப்படும் உடலுறுப்புகளின் வளர்ச்சியால் கூட தொண்டை, கருப்பை மற்றும் விரை தொடர்புடைய புற்றுநோய்கள் ஏற்படலாம். எனவே இந்த வயதினர் புற்றுநோய் ஏற்பட, மரபணு தொடர்பாக குறைந்த எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளனரா? என்ற திசையில் அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று அவர் கூறினார்.













பொதுவாக, புற்றுநோய் யாருக்கு அதிகமாக வருகிறது? அவர்கள் செய்யும் வேலையென்ன? என்பதை ஆய்வு செய்ய ஜப்பான் சுகாதார அமைச்சகம் முனைந்தது. அமர்ந்து கொண்டே வேலைசெய்பவர்களை விட, ஓடியாடி வேலை செய்பவர்கள் தான் குறைவாக புற்றுநோய் பெறுபவர்களாக இருக்கிறனர் என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்களை விட ஓடியாடி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களில் முறையே 13, 16 விழுக்காட்டினர் புற்றுநோய் பெறும் சாத்தியக்கூறுகள் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.




அமெரிக்க நோய் விபரவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள்படி, ஆய்வாளர்கள் ஜப்பானின் 9 மாநிலங்களில் வாழ்கின்ற 45 முதல் 74 வயது வரையான எண்பதாயிரம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு செய்தனர். அமர்ந்தே இருப்பது, நடப்பது, நிற்பது, உறங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்கள் நாள் முழுவதும் செய்கின்ற ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கண்காணித்தனர். ஓய்வு அல்லது கட்டுக்கோப்பான உடல் பெற எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், ஒட்டுமொத்த உடற்பயிற்சி மற்றும் வேலைகளை உள்ளடக்கி ஜப்பானில் முதல்முறையாக இந்த ஆய்வை செய்துள்ளனர். இதன் மூலம் ஓடியாடி வேலை செய்யும் அல்லது ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடும் ஜப்பானிய பெண்களிடத்தில் புற்றுநோய் ஏற்படும் விழுக்காடு குறிப்பிடதக்க அளவு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது




புற்றுநோய் புதிய தகவல் - III



சாதாரணமாக புற்றுநோய் உருவாகிய பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதனை கண்டறியக்கூடிய நிலையுள்ளது. இந்நிலையில் புற்றுநோய்க்கு இட்டுச்செல்லக்கூடிய கட்டிகளை இனம்காண பிரிட்டன் அறிவியலாளர்கள் ஒரு புதியவழியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டன் உணவு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள், பெருங்குடல் புற்றுநோயாளிகளின் உயிரணுக்களை சாதாரண உயிரணுக்களோடு ஒப்பிட்டு பார்த்தனர். புற்றுநோயாளிகளிடம் காணப்பட்ட உயிரணுக்களில் அந்நோய்க்கு இட்டு செல்லக்கூடிய சில வேதியல் மாற்றங்களை கண்டனர்.

குடல் தொடர்பான புற்றுநோய்க்கு இட்டு செல்லுகின்ற திசுக்களில் 18 மாற்றங்களையும், புற்றுநோயாளிகளின் இதர பகுதிகளிலான சாதாரண திசுக்களின் மரபணுக்களை விட தெளிவான வேதியல் மாற்றங்களையும் மரபணுக்களில் கண்டதாகவும் இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ஐயன் ஜாண்சன் குறிப்பிட்டார். பெருங்குடல் புற்றுநோயாளிகளின் வயிற்று பகுதியிலான உயிரணுக்கள், உயிரணு மூலக்கூறுகளை வழக்கத்திற்கு மாறாக பெற்றிருந்ததை ஆய்வில் கண்டறிந்தனர். இவ்வாறு உயிரணுக்களில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை தெரிந்து கொள்வதன் மூலம் வருங்காலத்தில் புற்றுநோய்க்கு இட்டுசெல்லும் திசுக்களை இனம்கண்டு அந்நோய் வருவதை தடுக்கும் முறையை கண்டறிந்துள்ளனர்.




<வேதியல் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படும் பிற முறைகளை மறுக்காதபோதும், மோசமான உணவு வகைகள் மற்றும் வாழ்க்கை முறையே இந்த வேதியல் மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்து புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணுக்களை தூண்டுகின்றன என்று ஆய்வாளர்களின் கருத்து தெரிவித்துள்ளனர். நம்முடைய உணவு முறைகளை கட்டுப்படுத்தி சத்தான நல்ல உணவு வகைகளை நமது வழக்கப்படுத்தி கொண்டால் ஆக்கபூர்வ நன்மை விளையும் தானே.





நன்றி -சீனா வானொலி





Read more...

கால்சியம் மாத்திரை யாருக்கு?

கல்சியம் மாத்திரைகள் யாருக்கு? எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்?

“நீங்கள் கல்சியம் குளிசை ஒவ்வொரு நாளும் போட வேண்டும்” என மருத்துவர்கள் ஆலோசனை கூறினால், “நான் ஏற்கனவோ தினமும் போடுகிறேன்” என்றுஅல்லது, “மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா குடிக்கிறேன்” என்ற மறுமொழிதான் இப்பொழுது கிடைக்கிறது.ஆம்! இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தான்.தாமாகவோ அல்லது ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களாலும் தூண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள். ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்.




  • எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன் செயற்பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும் ஒஸ்டியோபொரோசிஸ் (osteoporosis)நோய்க்கு கல்சியம் பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.எலும்புகளின் அடர்த்தி குறைவதுதான் ஒஸ்டியோபொரோசிஸ் நோயாகும். இந் நோயிருந்தால் எலும்புகள் உடைவதற்கான சாத்தியம் அதிகமாகும். வயதானவர்கள் பலரினதும் எலும்புகள் அடர்த்தி குறைவதனாலேயே அவர்களுக்கு எலும்பு முறிவு (Fracture) அதிகளவில் ஏற்படுகிறது.எவ்வளவு கல்சியம் உபயோகிக்க வேண்டும்? பகலிலா இரவிலா எடுப்பது நல்லது? சாப்பாட்டிற்கு முன்னரா பின்னரா? போன்ற பல சந்தேகங்கள் பாவனையாளர்களுக்கு எழுவதுண்டு.கல்சியம் என்பது ஒரு கனிமம். இது கார்பனேட், சிற்ரேட், லக்டேற், குளுக்கனேட் (carbonate, citrate, lactate, gluconate) போன்ற ஏதாவதொன்றின் கலவையாகவே கிடைக்கிறது. கல்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு பொதுவாக 500 மி;கி முதல் 1200 மி;கி வரையான கல்சியம் தினமும் மேலதிகமாகத் தேவைப்படும்.எடுப்பது கல்சியம் கார்பனேட் மாத்திரையாயின் அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது மேலானது. ஏனெனில் உணவு உண்ணும் போது சுரக்கும் அமிலமானது கல்சியம் குடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும். கல்சியம் கார்பனேட் மாத்திரைகள் விலை குறைந்தவை.கல்சியம் சிற்ரேட் மாத்திரையாயின் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம், அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அமிலம் குறைந்த நிலையிலும் இது இலகுவாக உறிஞ்சப்படுவதால், இரைப்பை புண்களுக்காக ஒமிபிரசோல் (Omeprazole) போன்ற மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் உகந்தது. மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறைவு. ஆனால் சற்று விலை கூடியது.கல்சியம் லக்டேற், கல்சியம் குளுக்கனேற் போன்றவை அடர்த்தி குறைந்தவையாதலால் மேலதிக கல்சியம் தேவைப்படுபவர்களுக்கு போதுமானவை எனக் கூறமுடியாது.இவற்றை காலை, மாலை, இரவு ஆகிய எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாத்திரைப் பெட்டியில் உள்ள குறிப்புத் துண்டினைப் பார்க்கவும். ஆயினும் ஒரு நேரத்தில் 500 மி;கி(mg) ற்கு மேற்பட்ட அளவில் எடுப்பது நல்லதல்ல. ஏனெனில் 500 மி;கி க்கு மேல் எடுக்கும்போது கல்சியமானது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்படுவது குறைவாகும். எனவே உங்கள் தினசரித் தேவை 1000 மி;கி எனில் அதனை 2 அல்லது 3 தடவைகளாளகப் பிரித்து எடுப்பது உசிதமானது.அத்துடன் ஏனைய மருந்துகளுடன் சேர்த்து எடுப்பதுவும் நல்லதல்ல. முக்கியமாக நுண்ணுயிர் எதிர் மருந்து (Antibiotic), உயர் இரத்த அழுதத்திற்கான மருந்துகளுடன் ஒரே நேரத்தில் சேரத்து உட்கொள்ளவும் கூடாது. ஏனெனில் அவை உறிஞ்சப்படுவதை கல்சியம் பாதிக்கும். இதனால் இம் மருந்துகள் தேவையான அளவு பலனைக் கொடுக்கமாட்டா.கல்சியம் மனிதர்களுக்கு நாளாந்தம் தேவைப்படுகிறது. ஆயினும் குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும், முதுமையிலும் இதன் தேவை அதிகரிக்கிறது. இளமையில் எலும்புகள் வளர்வதால் அதனை ஈடு செய்யவும், முதுமையில் எமது உடலானது கல்சியத்தை உறிஞ்சுவது பாதிப்படைவதாலும் அதிக கல்சியம் எடுக்க நேர்கிறது.எமது நாளந்தத் கல்சியத் தேவையை நாம் பொதுவாக பால், பால்மா, யோகொட், தயிர், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.பாலிலும், ஏனைய பாற் பொருட்களிலிலும் உள்ள கல்சியம் மிக இலகுவாக உறிஞ்சப்படுகிறதுகல்சியம் பற்றிப் பேசும்போது விட்டமின் டி (Vit D) பற்றியும் அறிந்திருப்பது நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், கல்சியம் சிறப்பாக உறிஞ்சப்படுவதற்கும் விட்டமின் டி எமது உடலுக்குத் தேவை. தினமும் 400 முதல் 800 யுனிட் தேவைப்படுகிறது. அதனையும் நாம் பொதுவாக பாற் பொருட்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறோம்.சூரிய ஒளியும் விட்டமின் டி யைக் கொடுக்கிறது. தினமும் 15 நிமிடமளவு சூரிய ஒளி பட்டால் போதுமானது.மத்திய தரை ரேகைக்கு அருகில் வாழும் எம்போன்றவர்களுக்கு போதிய வெயில் கிடைப்பதால் இது பாரிய பிரச்சனை அல்ல. மேலைநாட்டவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களுக்கு சூரியக் குளிப்புச் செய்தால்தான் இயற்கையாகக் கிடைக்கும்.இப்பொழுது பெரும்பாலான கல்சியம் மாத்திரைகளில் விட்டமின் டி யும் சேர்க்கப்பட்டுள்ளது.“ஆண்களுக்கு கல்சியம் மாத்திரைகள் தேவையா?” பலர் என்னிடம் கேட்கும் கேள்வி இது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வயதாகும்போது கல்சியம் உறிஞ்சப்படுவது குறைவடைகிறது. இதனால் எலும்பின் அடர்த்தி குறைகிறது. ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. இந் நிலையில் அவர்களும் விழுந்தால் உடைவுகள் ஏற்படுவது நிச்சயம். எனவே அவர்களுக்கும் கல்சியம் நிச்சயம் தேவை.

    Read more...

    About This Blog

    என்றும், எங்கும், எப்போதும்
    தோல்விகள் துரத்தி அடிக்கிறது
    உரிமை, புரட்சி, எழுச்சி
    வார்த்தைகளின் வறட்சி
    நொறுங்கிப் போகிறது கொள்கை கோட்பாடு...!

    Lorem Ipsum

    வந்து போனவங்க

      © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

    Back to TOP